Tuesday, 31 January 2023

கிராம உதவியாளர் பணியிட நியமனம்: மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் https://ift.tt/pqB8FMZ

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிட நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 2016 பிரிவு 34ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, 30 January 2023

பணி நியமன முறைகேடு | சேலம் பெரியார் பல்கலை.யில் அரசு நியமித்த குழு விசாரணை https://ift.tt/BaAoljX

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம், முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து தமிழ்நாடு அரசு நியமித்த விசாரணை குழுவினர் நேற்று முதல்கட்டமாக ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நியமனம் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தது குறித்து புகார் எழுந்தது. இதில், உடற்கல்வி இயக்குனர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் இட ஒதுக்கீடு ஆணைப்படி நியமிக்காதது, தமிழ் துறை தலைவர் பெரியசாமி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், பெரியசாமி கொடுத்த போலிச் சான்று, தகுதியின்மை குறித்து புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, 29 January 2023

209 கிராம உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களே நியமனம்: சிபாரிசுக்கு இடம்கொடுக்காத மதுரை ஆட்சியருக்கு குவியும் பாராட்டு https://ift.tt/oTO0A5d

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் துறையில் தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) பணி நியமனம் தேர்வில் ஆளும்கட்சி சிபாரிசுகள், தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சியர் அனீஸ் சேகர், நேர்மையாக தேர்வு நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அவரின் இந்த நேர்மையான நடவடிக்கையை கண்டு எந்த சிபாரிசுக்கும் போகாத, நேர்மையாக தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, 27 January 2023

சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழர் பெருமையை போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி தொடக்கம் https://ift.tt/bMY9Xki

சென்னை: தமிழர் பெருமைகளைப் போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் கோலாகலமாகத் தொடங்கியது. காந்தி உலக மையம் என்ற சமூகநல அமைப்பு சார்பில், தமிழர் பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘மண்ணும் மரபும்’ என்ற கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எத்திராஜ் கல்லூரித் தலைவர் வி.எம்.முரளிதரன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, 26 January 2023

மார்ச் மாதத்துக்குள் மதுரை கோட்டத்தில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயம் - மேலாளர் தகவல் https://ift.tt/H9zFJbX

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், ரயில்வே காலனி செம்மண் திடலில் நடந்த விழாவில் ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ராணுவ உடையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் பேசியவர், "இக்கோட்டம் 9 மாதங்களில் ரூ. 800 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்தாண்டைவிட 57 சதவீதம் அதிகம். ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கைவிட 20 சதவீதம் கூடுதல். இது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை. இக்கோட்டத்தில் ரயில்கள் மூலம் 25 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இதன்மூலம் ரூ. 502.05 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயைவிட 79 சதவீதம் அதிகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரூர் | குடியரசு தின விழாவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கேடயம் - வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டு https://ift.tt/aXqV5zi

கரூர்: குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக தொழிலாளரை விரட்டி அடிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ குறித்து திருப்பூர் போலீஸார் விசாரணை https://ift.tt/VjhCMAt

திருப்பூர்: திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணி செய்து வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆக்ரா: திடீரென இடிந்து விழுந்த 6 வீடுகள்; 4 வயது குழந்தை பலி - அகழ்வாராய்ச்சி பணிகள் காரணமா?

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் திலா மைதான பகுதியிலுள்ள தரம்சாலாவில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென அந்தப் பகுதியில் ஆறு வீடுகள் மற்றும் ஒரு கோயில் இடிந்து விழுந்திருக்கின்றன.

இடிந்து விழுந்த வீடுகள்

இந்தச் சம்பவம் குறித்து இடிந்த வீட்டின் உரிமையாளர்களில் ஒருவரான முகேஷ் சர்மா, ``காலை 7.05 மணிக்கு விபத்து நடந்தது. இந்தப் பகுதி மிகவும் மேடானது. எங்கள் வீடுகளுக்கு அடுத்ததாக தரம்சாலா இருக்கிறது. அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக நிலம் தோண்டப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்டு அடுத்தடுத்து ஆறு வீடுகள், ஒரு கோயில் இடிந்து விழுந்தன.

அதில், எங்கள் வீடும் இடிந்து விழுந்தது. என் இரண்டு பேத்திகளும், மகனும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், அதற்குள் என் பேத்தி இறந்துவிட்டாள். இந்த கட்டட பணியை நிறுத்த பலமுறை கூறியும், அவர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இடிந்து விழுந்த வீடுகள்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் குழுக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். கட்டட இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதில், 4 வயது குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.



from தேசிய செய்திகள்

Wednesday, 25 January 2023

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி ரூ.1.9 கோடி மதிப்பிலான நகைகள் பறிப்பு - மும்பையில் அதிர்ச்சி!

மோசடியில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு வித்தியாசமான கொள்ளை நடந்திருக்கிறது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் சூர்யா சி.பி.ஐ அதிகாரி என்று கூறி ரெய்டு நடந்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் ரெய்டு நடத்தியவர்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறியிருக்கின்றனர். மும்பை, ஜவேரி பஜார் பகுதியில் அதிகமான தங்கம், வைரம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருக்கின்றனர்.

மோசடி

சிறிய கடையில்கூட பல கோடிக்கு தங்கம், வைரம் இருக்கும். ஜவேரி பஜாரிலுள்ள அது போன்ற ஓர் அலுவலகத்துக்குள் சிலர் நுழைந்தனர். அவர்கள் தாங்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வி.பி.எல் புல்லியன் என்ற கடைக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் ஒருவரின் பெயரை கூறிக்கேட்டனர். அதோடு அங்கு வேலை செய்த சிலருக்கு கைவிலங்கிட்டனர். மேலும் சிலரை ரெய்டுக்கு வந்தவர்கள் அடித்து உதைத்தனர்.

மொத்தம் 6 பேர் வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். இரண்டு பேர் கடைக்கு வெளியில் பாதுகாப்புக்கு நின்று கொண்டனர். 4 பேர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த ஊழியர்களை மிரட்டி `கடை உரிமையாளர் விராட் பாய் எங்கே' என்று கேட்டனர். ஊழியர்கள் அவர் இல்லை என்று தெரிவித்தவுடன் அனைவரும் மொபைல் போனுடன் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். ரெய்டுக்கு வந்தவர்கள் அங்லிருருந்த பீரோவில் தேடிப்பார்த்ததில் ரூ.1.90 கோடி மதிப்பிலான பணம், நகைகள் இருந்தன.

கைது

அவற்றை எடுத்து எடுத்துக்கொண்டு, சில ஊழியருக்கு கைவிலங்கிட்டு, அதே கம்பெனிக்குச் சொந்தமான அருகிலிருந்த மற்றொரு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சென்ற பிறகு ஊழியர்களின் கைவிலங்கை கழற்றிவிட்டு 6 பேரும் தங்கம், பணத்துடன் தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. உதவி இன்ஸ்பெக்டர் சுஷில் குமார் இது குறித்து, ``வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 6 பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மொகமத் கிளிட்வாலா என்பவரை டோங்கிரியில் கைதுசெய்திருக்கிறோம்.

மால்வானியில் சமீர் என்பவரையும், கேட் என்ற இடத்திலிருந்து விசாகா என்பவரையும் கைதுசெய்திருக்கிறோம். எஞ்சிய மூன்று பேரையும் தேடி வருகிறோம். ஸ்பெஷல் 26 என்ற இந்திப் படத்தில் வருவது போன்று இந்தக் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள்

T

Breaking News Live Updates - 22 March 2023: Moderna's Covid-19 Vaccine to Cost $130 Per Dose in US

News alerts from India, across the world, on coronavirus, politics, education, business, entertainment, lifestyle and sports. Follow all liv...